ADVERTISEMENT

"நடிகை சித்ரா மரணத்தில் முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு" - பரபரப்பை கிளப்பிய ஹேம்நாத்

03:41 PM Apr 29, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு தனியார் ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததைக் கருத்தில் கொண்டு ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வந்தது.

இந்நிலையில் ஹேம்நாத், சித்ராவின் மரணத்தில் ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், "சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உண்மையை சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள். நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன். எனது மனைவியின் மறைவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் உயிர் வாழ விரும்புகிறேன். ஒரு வேளை அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய தகவல்களை வெளியிடுவேன்" என கூறியுள்ளார். ஹேம்நாத் தெரிவித்திருக்கும் இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து இந்த வழக்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT