தமிழில் வெற்றிபெற்ற 'காஞ்சனா' தொடர் படத்தின் முதல் பாகத்தை இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.
கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாரக இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது.
அதன்பின் இப்படம் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 9ஆம் தேதி நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி செம வைரலானது.
இந்நிலையில் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து சோஷியல் பிளாட்ஃபார்மிலும்70 மில்லியன் பேர் இந்த ட்ரைலரை பார்த்திருப்பது சாதனையாகியுள்ளது.