“சர்வதேச அளவிலான இயக்குநர் கிடைத்துவிட்டார்” - லாரன்ஸ் பாராட்டு  

lawrence praises dhanush raayan

தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த 26ஆம் தேதி வெளியான திரைப்படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தனுஷின் 50வது திரைப்படம் என்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையடுத்து படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் , “எனது ஆதரவுத் தூண்களான ரசிகர்களாகிய நீங்கள் பொழிந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இதுதான் எனக்கு சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

lawrence praises dhanush raayan

இந்த நிலையில் இப்படத்திற்கு நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ், பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேற்று ராயன் படம் பார்த்தேன். தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கம் அற்புதமாக இருந்தது. எஸ்.ஜே சூர்யா நடிப்பு வித்தியாசமானதாக இருந்தது. துஷாரா விஜயனின் நடிப்பு நன்றாக இருந்தது. அனைவரின் நடிப்பும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இசையும் சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தமாக படத்தின் திரைக்கதை, அனைத்துமே எனக்கு பிடித்திருந்தது. சன் பிக்சர்சஸ்நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நமது துறைக்கு சர்வதேச அளவிலான இயக்குநர் கிடைத்துள்ளார். உங்களின் 50வது படத்திற்கு வாழ்த்துக்கள் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

actor dhanush actor raghava lawrence Raayan
இதையும் படியுங்கள்
Subscribe