lawrence

Advertisment

கேரளாவில் வரலாறு காணாத மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. 7 லட்சம் கேரள மக்கள் தங்களின் வீட்டைவிட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கும் அளவிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 19,000 கோடிக்கு இப்பேரிடரால் சேதம், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இதனை சரி செய்ய, அரசாங்க நிவாரண நிதியை தாண்டி மக்களிடம் இருந்தும் தேவைப்படுவதால் உலகளவில் இருக்கும் இந்தியர்கள், இந்தியர்கல்லாதோர் என்று பலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அதேபோல, தமிழக திரையுலக பிரபலங்களும் தங்களின் அண்டை மாநிலமான கேரளாவுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான ராகவா லாரன்ஸ் கேரளாவுக்கு ஒரு கோடி நிதி அளிக்க இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அதில் வருகின்ற சனிக்கிழமை கேரளா முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து நிதியை கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.