Skip to main content

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள் கட்டி தரும் ராகவா லாரன்ஸ் 

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
lawrence

 

‘கஜா’ புயல் தாக்கி தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில்  திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

 

 

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தால் எங்களிடம் தெரிவிக்கவும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்