Advertisment

குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

latha rajinikanth meets Droupadi Murmu

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்து சேர்ந்த குடியரசுத் தலைவரைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த வரவேற்பில் மணிமேகலை நூலின் ஆங்கிலப் பாதிப்பை குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதல்வர் வழங்கினார். பின்பு சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.

Advertisment

இதையடுத்து சென்னையை அடுத்துள்ள உத்தண்டியில் அமைந்துள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில்பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில் திரௌபதி முர்முவை நடிகை மதுவந்தி தனது குடும்பத்தினருடன் வரவேற்றார். அப்போது அவருடன் லதா ரஜினிகாந்த், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Advertisment

Draupadi Murmu latha rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe