Skip to main content

கோச்சடையான் வழக்கு கெடுவிற்கு லதா ரஜினிகாந்த் விளக்கம் 

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
mr.chandramouli

 

 

kochadaiyaan

 

 

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய இப்படத்தின் தயாரிப்புப் பணிக்காக வாங்கிய கடன் தொகையில் ரூ.6.20 கோடி லதா ரஜினிகாந்த் பாக்கி வைத்திருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் என்றும் ஏட் பீரோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 3ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது வருகிற 10ஆம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் அப்படி மீறும் பட்சத்தில் லதா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

 

 

 

இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் ஏற்கனவே வெளியான செய்திகளை தற்போது மறுத்து நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....  "சில அச்சு ஊடகங்கள் மற்றும் இனைய செய்தி தளங்களில் கடந்த  ஜூலை 3 ,2018 ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாதங்களின் போது கூறப்பட்டவைகளைச் செய்தியாக்கிய ஊடகங்கள், அதற்கு முற்றிலும் மாறாக 3 ஜூலை 2018 ம் தேதி நீதிமன்ற அதிகாரபூர்வ ஆணையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களை பற்றி குறிப்பிட்டு இருப்பதை செய்தி நிறுவனங்கள் முழுமையாக குறிப்பிடவில்லை" என கூறி உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் வெளியிட்டுள்ளார். 

 

 

 

அதில்.... "M / S மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி, முதல் எதிர் மனுதாரரான திருமதி.லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது எதிர் மனுதாரரின் கருத்தினை கேட்காமல் பதிவு செய்ய பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு அவருடைய பொறுப்புகள் இல்லை. எனவே 16 -4 -2018 தேதியில் வெளியான நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாக கூறப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்நுழைவதை விட, மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும் வழக்கு இறுதித்தீர்ப்புக்காக ஜூலை 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது" என்று நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோச்சடையான் ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

rajini kochadaiyaan movie ost update by ar rahman

 

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

 

30 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படங்களின் ஓ.எஸ்.டி (ORIGINAL SOUND TRACK) எனப்படும் ஒரிஜினல் பின்னணி இசையை வெளியிடாமல் இருந்து வருகிறார். ஆனால், கடந்த வருடம் நவம்பர் மாதம், "99 சாங்ஸ், வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் 1 உள்ளிட்ட படங்களின் பின்னணி இசையை இந்த மாதம் ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

 

இம்மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த பதிவிற்கான அடுத்த அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வெந்து தணிந்தது காடு மற்றும் கோச்சடையான் படங்களின் பின்னணி இசையின் மாஸ்டர் காப்பி உரிய மியூசிக் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் இந்த படங்களின் ஒரிஜினல் பின்னணி இசை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதனிடையே இசை படைப்புகளின் காப்புரிமையின் வரி தொடர்பாக ஜி.எஸ்.டி ஆணையருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையேயான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.