Advertisment

'கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கல' - நடிகை லதா கண்டனம் 

நேற்று முன்தினம் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் குறித்து நடிகை கஸ்தூரி ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகை லதா கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....

Advertisment

latha

"எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..? கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்.

Advertisment

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி. இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

kasthuri actress latha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe