sethuraman

‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இதனைத் தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

Advertisment

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு அவரது வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவருக்கு வயது 37. கடந்த 2016ஆம் ஆண்டுதான் உமையாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குஒரு மகள் இருக்கிறார்.

Advertisment

சேதுராமன், தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்படுகிறார். எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேதுராமன் மறைவின்போது, கர்ப்பமாக இருந்த அவரது மனைவி தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பலரும் இறந்துபோன சேதுதான் குழந்தையாக பிறந்துள்ளார் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.