Lata Mangeshkar health worrying again

Advertisment

பழம்பெரும் பின்னணி பாடகிலதா மங்கேஷ்கருக்கு(92)சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்லதா மங்கேஷ்கரின்உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்குஉயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், மருத்துவக்குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய மொழிகளில் இதுவரை 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.