large number fans have gathered see Ajith Trichy Rifle Club

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும்ரைபிள்கிளப்பில் 47-வதுமாநிலதுப்பாக்கி சுடுதல்சாம்பியன்ஷிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில்பிஸ்டல்மற்றும்ரைபிள்துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுடன் நடிகர் அஜித்தும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர்பிஸ்டல்பிரிவில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டுள்ளார்.

Advertisment

இதனிடையே அங்கு நடிகர்அஜித்தைபார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்துரசிகர்களைபார்க்கரைபிள்கிளப்மடியில் ஏறிய அஜித்அவர்களுக்குகையசைத்து முத்தமிட்டார். மேலும்அஜித்தைபார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டதால்அவர்களைகட்டுப்படுத்த முடியாமல் தவித்தபோலீசார்இறுதியில் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

Advertisment