Lalit Kumar Modi and actress sushmita sen are in relationship now

Advertisment

லலித் மோடி (56), இந்தியாவில் மிக பிரபலமான இந்தியன் ப்ரீமியர் லீக் அமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்து வந்தவர். இதனிடையே பெருமளவு வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை சி.பி.ஐ. அவர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. பின்பு இந்தியாவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வாழ்ந்து வருகிறார் . இந்நிலையில் முன்னாள் உலக அழகி மற்றும் பிரபல நடிகையான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடல் அழகனான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார். பிறகு கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர், தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் லலித் மோடியும் சுஷ்மிதா சென்னும் டேட்டிங் உறவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் லலித் மோடி. மேலும் அந்த ட்விட்டர் பதிவில், "மாலத்தீவு, சார்தானியா உள்ளிட்ட பல இடங்களுக்கு உலக சுற்றுலா சென்றுவிட்டு இப்போதுதான் லண்டனுக்கு திரும்பியுள்ளோம். ஒருவழியாக புது வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதுவும் நடக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.