Advertisment

‘ஆட்டம் ஆரம்பம்’ - மொய்தீன் பாயாக நடிக்கும் ரஜினிகாந்த்

Advertisment

lal salaam rajinikanth character poster released

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலையில் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் நடந்த 34 நாட்கள் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் தொடர்பான பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சமீபத்தில் திருவண்ணாமலை ஷெட்யூலை முடித்த படக்குழு அதனை கேக் வெட்டி கொண்டாடியது. இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் இப்படத்தில்ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அதன் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த் இதுவரை இல்லாத அளவு கொஞ்சம் வித்தியாசமாக முஸ்லீம் தொப்பி அணிந்து புது கெட்டப்பில் இருக்கிறார். மேலும் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Actor Rajinikanth aishwarya rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe