ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். லைகா தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் கலைவையான விமர்சனத்தை பெற்றது. பின்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதாக பேட்டியளித்திருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகமலே இருந்தது. இந்த சூழலில் ஒரு வழியாக படத்தின் ஓடிடி அப்டேட் வெளியானது. அதன்படி கடந்த பக்ரீத் அன்று இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது. எக்ஸ்டன்டட் வெர்ஷனுடன் இப்படம் ஸ்ட்ரீமாகி வருகிறது.