Advertisment

பொங்கல் ரேசிலிருந்து விலகிய லால் சலாம்

lal salaam new release date update

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து ‘தேர்த் திருவிழா’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

Advertisment

இப்படம் வருகிறபொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின்தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியது. இந்த நிலையில் இப்படம் பொங்கல் ரேசிலிருந்து விலகியுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது புது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் ரேசில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth actor vishnu vishal aishwarya rajinikanth vikranth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe