Lal Salaam first single Ther Thiruvizha lyric video released

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘தேர்த்திருவிழா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இப்பாடலின் லிரிக் வீடியோ கிட்டத்தட்ட 8 நிமிடம் இருக்கிறது. ஊரில் உள்ள மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு கூடுவதை மையமாக இந்த பாடல் அமைந்துள்ளது. மேலும் திருவிழாவிற்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டுள்ள காட்சிகளை படக்குழு பாடலில் இணைத்துள்ளது. இப்பாடலை ஷங்கர் மகாதேவன், ஏ.ஆர். ரைஹானா, தீப்தி சுரேஷ், யோகி சேகர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். விவேக் வரிகள் எழுதியுள்ளார். பாடலில் வரும் ‘ஓடி கலைச்ச சனம்... தேடி கலைச்ச சனம்...’, ‘தூங்கி வழிஞ்ச மரம்... கிளையோரம் சொந்தம் சேர பூக்குதே... மாட்டுக்கும் சீர் உண்டு, பூனைக்கும் மீன் துண்டு’ உள்ளிட்ட பல வரிகள் பாடலின் சூழலுக்கு ஏற்றார்போல் அமைந்துள்ளது.