இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இத்தாலியில் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், சீனாவில் இத்தனை மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து நாம தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அதனால தான் இந்திய அரசாங்கம் 21 நாள் இந்த லாக் டவுனை கொண்டு வந்திருக்காங்க. இங்கே கீழே பாருங்க. இளைஞர்கள் கூட்டமாக நின்று கிரிக்கெட் விளையாடுறாங்க. எதற்காக விடுமுறை விட்டார்கள். ஜாலியா கிரிக்கெட் விளையாடவா?
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நாம எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறோம். மருத்துவத்தில் வளர்ந்த நாடுகளே கரோனா வைரஸை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் நடுங்கிக் கிடக்கிறார்கள். உலகமே பெரிய ஆபத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த விளையாட்டு ரொம்ப முக்கியமா? இந்த விடுமுறை என்ன வெக்கேஷன் டைம்மா? இளைஞர்கள் தயவு செய்து வெளியே சுத்தாதீங்க. வீட்டுல பாதுகாப்பா இருங்க. உங்க பாதுகாப்புதான் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பாதுகாப்பு" என்று கூறியுள்ளார்.