“என்னை போல நீங்களும் ஏமாந்துடாதீங்க” - கண்ணீர் வடிக்கும் பிரபல நடிகை

Lakshmi Vasudevan complaint against online scam

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான லட்சுமி வாசுதேவன், தனது சமூக வலைதள பக்கத்தில்கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தயவு செய்து இந்த தவறை யாரும் பண்ணாதீங்க. உங்களுக்கு லக்கி பரிசு அடித்துள்ளது என எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.அதனைக்ளிக் செய்தவுடன் ஒரு ஆப் தானாகவே டவுன்லோட் ஆனது. அதன் பிறகு நான் 5 ஆயிரம் லோன் வாங்கியிருப்பதாகவும், உடனே அதை கட்ட வேண்டும் என்றும் தகவல் வந்தது. இதே போன்று தொடர்ந்து போன், மெசேஜ் செய்து மிரட்டி வந்தனர். ஆனால் நான் கட்ட மறுத்தவுடன் என்னுடைய புகைப்படங்களை மார்ஃபிங்செய்து என்னுடைய வாட்ஸ் ஆஃப்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பியுள்ளனர். அதில் எனது பெற்றோர்களுக்கும்அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பணத்தை திருப்பி கட்ட சொல்லி மெஜேச் போன் கால் வருகிறது. இது குறித்துஹைதராபாத் சைபர் க்ரைம்போலீஸில்புகார்அளித்துள்ளேன். தயவு செய்து என்னை போல நீங்கள் யாரும் லக்கி பரிசு அடித்துள்ளது என்றுமெசேஜ் வந்தால் ஒப்பன் செய்து விடாதீர்கள்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Actress online scams
இதையும் படியுங்கள்
Subscribe