'விஜய் சேதுபதி தான் எங்கள் படத்தை காப்பாற்ற வேண்டும்' - லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

lr

விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் கே. ப்ரொடக்ஷன்ஸ், பாகுபலி தயாரிப்பாளர் ஆக்ரா ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக சிந்துபாத் படம் கடந்த ஜூன் 21ந்தேதி வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் ஜூன் 28ந்தேதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையே லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படமும் ஜூன் 28ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி சமூகவலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில்... "பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.

lakshmi ramakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe