Published on 23/07/2019 | Edited on 23/07/2019

அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருக்கும் ஆடை படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. இவரின் துணிச்சலான நடிப்பை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் பாராட்டி வரும் நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதில்... "ஹாய் டியர், ஆடை படத்திற்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன். உங்களின் கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு நீங்கள் தயாரா...? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக, நடிகராக அல்ல. ஒரு பெண்ணாகவும், தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என பதிவிட்டுள்ளார்.