lakshmi menon to pair with aari arjunan in next movie

ஆரி அர்ஜுனன் ஹீரோவாக 2018ஆம் ஆண்டு வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். பின்பு உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது சமீபத்தில் சேரன் இயக்கத்தில் வெளியான ஜர்னி வெப் தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே ஹன்சிகா நடிக்கும் மேன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதி பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ராஜசேகர பாண்டியன் இயக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது முதல் படமாக இப்படத்தைத்தயாரிக்கிறது. மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Advertisment

லட்சுமி மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படத்தில்நடித்திருந்தார். அப்படம் சரியாகப் போகவில்லை. இப்போது யோகிபாபுவின் வானவன், ஆதியின் சப்தம் உள்ளிட்ட படங்களைக்கைவசம் வைத்துள்ளார்.