Lakshmi Menon joins in p.vasu, Raghava Lawrence 'Chandramukhi 2'

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. அதன் பின்பு 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' தற்போது பிரமாண்டமாக உருவாகிறது. இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ராகவாலாரன்ஸ்நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார்.லைகாநிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தில் லட்சுமிமேனன்முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்த முக்கிய கதாபாத்திரத்தில்த்ரிஷாநடிக்கவுள்ளார்எனத்தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால்த்ரிஷாநடிக்க மறுத்ததாகவும் அதனால் தற்போது லட்சுமிமேனனிடம்படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் வருகிற 15-ஆம் தேதி முதல்தொடங்கிதொடர்ந்து 30 நாட்கள்நடத்தபடக்குழு திட்டமிட்டுள்ளதாகசினிமாவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment