Advertisment

"ப்ரோ நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்" - பூமி இயக்குனர் காட்டம்!

ngcnd

ஜெயம் ரவி - லக்ஷ்மன் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவான ‘பூமி’ படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொங்கலன்று ஓடிடியில் வெளியானது. இயற்கை விவசாயத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Advertisment

மேலும் பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்தை தாக்கி கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டு வரும் நிலையில் 'பூமி' பார்த்த ரசிகர் ஒருவர், "இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. 'சுறா', 'ஆழ்வார்', 'அஞ்சான்', 'ராஜபாட்டை' வரிசையில் முதலிலிருந்து முடிவு வரை எதுவுமே சரியாக இல்லை. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி" என்று சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

Advertisment

இதைக் கண்ட இயக்குனர் லக்ஷ்மன், "சார், நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர் ப்ரோ ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்" என பதில் பதிவிட்டார்.

Director Lakshman jayam ravi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe