Advertisment

அத்துமீறிய இசையமைப்பாளர் ; பாடகி பகீர் குற்றச்சாட்டு

lagnajita chakraborty accuses rajesh roshan

பெங்காலி திரைப்படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி லக்னஜிதா சக்ரவர்த்தி. இவர் தனது சிறுவயதில் பாலியல் தொல்லை நடந்ததாக தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் தன்னிடம் அத்துமீறியதாக கூறும் அவர், அந்த சம்பவத்தை விரிவாக பேசியுள்ளார்.

Advertisment

அவர் கூறுகையில், “நான் மும்பையில் வசித்த போது ராஜேஷ் ரோஷன் அவரது இல்லத்திற்கு என்னை அழைத்தார். அவர் வீடு பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. அதில் அவரது இசை அறையில் நான் உட்கார்ந்தேன். என்னுடன் பலரும் அங்கு இருந்தார்கள். அந்த அறையில் அனைத்து விதமான கருவிகளும் வசதிகளும் இருந்தது.

Advertisment

lagnajita chakraborty accuses rajesh roshan

நான் உட்காந்திருந்த இடத்திற்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் நான் விளம்பர பாடல்களை பாடியிருந்தேன். அதனால் டேபில் இருந்த ஐ-பேடில் என்னுடைய பாடலை காண்பிக்கும் படி அவர் கேட்டார். உடனே நான் ஐ-பேடில் அதை தேடிக் கொண்டிருந்த போது அவர் என் அருகில் வந்தார். நான் அதை பார்த்தேன் இருந்தாலும் ரியாக்ட் செய்யவில்லை. பின்பு அவர் என் ஆடைக்குள் கை வைத்தார். உடனே நான் எதுவும் பேசாமல் எழுந்து வந்துவிட்டேன். அதன் பிறகு அந்த சம்பவம் குறித்து நான் பெரிதாக பேசவில்லை. அழவும் இல்லை. ஏனென்றால் அது அவருடைய தவறு. என்னுடைய தவறில்லை” என்றார். ராஜேஷ் ரோஷன் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் ராகேஷ் ரோஷன் தம்பி மற்றும் ஹிருத்திக் ரோஷனின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood music director singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe