Advertisment

மேடையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து... பிரபல பாடகி பலி...

சூப்பர் ஹாலிவுட் என்ற இசைக்குழுவின் இசை கச்சேரி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்றது. இதனை காண அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

Advertisment

joana sanz

இந்த கச்சேரியில் பிரபல பாப் பாடகி ஜோனா செய்ன்ஸ் கலந்துகொண்டு பாடல் பாடினார். அப்போது மேடையில் பட்டாசுகளை வெடிக்க செய்யும் பைரோடெக்னிக் என்ற இயந்திரம் திடீரென வெடித்தது. இதனால் அருகே நின்று பாடிக்கொண்டிருந்த ஜோனா செய்ன்ஸ் படுகாயம் அடைந்தார்.

alt="zombi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="58bab381-d796-4746-a80b-49282b86c57c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/zombi-336x150_0.jpg" />

Advertisment

இதனையடுத்து உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் வைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாடகி ஜோனா செய்ன்ஸ் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே உயிர் இழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பலரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

popsinger spain
இதையும் படியுங்கள்
Subscribe