Skip to main content

“நான் எப்போது குளித்தேன்  என்பதை மறந்துவிட்டேன்”- வைரலாகும் பிரபல பாடகியின் பதிவு!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

உலகளவில் மிகப்பெரிய பாப் பாடகியான லேடி காக தனது ஆறாவது ஆல்பத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
 

lady gaga


தன்னுடைய தூய்மை குறித்து தனது ஊழியரிடம் பேசியதை லேடி காகா கடந்த புதன்கிழமை அன்று  ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. லேடி காகா கடந்த 2016ஆம் ஆண்டு ஜோன் என்கிற ஆல்பத்தை ரிலீஸ் செய்த பின் ஆறாவது ஆல்பம் ஒன்றிற்கு கடுமையாக ஸ்டூடியோவிலேயே உழைத்து வருகிறாராம். 
 

hero


இந்நிலையில் லேடி காகா தனது ட்விட்டரில், “உதவியாளர்: கடைசியாக எப்போது குளித்தாய் , லேடி காகா: எனக்கு தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் எல்ஜி 6 என்று ஹேஸ்டேகை உருவாக்கியுள்ளார். இதன் மூலமாக தனது ரசிகர்களிடம் ஆல்பம் பணியால் தான் பிஸியாக இருப்பதை தெரிவிக்க இவ்வாறு கலகலப்பாக ட்விட் செய்துள்ளார் லேடி காகா என்று கூறுகின்றனர். 
 

dabaang


இதற்கு முன்பும் ஒருமுறை லேடி காகா கர்ப்பமாக இருக்கிறார் அதனால்தான் வெளியே எங்கும் காணப்படவில்லை என்று கிசுகிசு கிளம்பியது. அந்த சமயத்திலும் லேடி காகா இதுபோலதான், “ஆமாம் நான் கர்ப்பமாக இருக்கிறேன், எனது ஆறாவது ஆல்பத்துடன் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். 


 

சார்ந்த செய்திகள்