/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/806760bd-5aaf-4ec7-aa60-955944ee1202.jpg)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்த எஸ்.பி. ஜனநாதன் சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த ‘லாபம்’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நடந்து அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியது. அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவுசெய்து, திட்டமிட்டபடி படத்தினை திரைக்குக் கொண்டுவரும் முனைப்போடு படக்குழு பணியாற்றிவருகிறது. இந்த நிலையில், ‘லாபம்’ படம் சென்ற ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டன. இந்த நெருக்கடியான நிலையைக் கருத்தில்கொண்டு ‘லாபம்’ படத்தின் ரிலீஸைப் படக்குழு தள்ளிவைத்தது. இந்நிலையில் தற்போது கரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், 'லாபம்' படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)