Advertisment

‘லாபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vijaysethupathi

Advertisment

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்த எஸ்.பி.ஜனநாதன், சமீபத்தில் மரணமடைந்தார். அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த ‘லாபம்’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நடந்து அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியது. அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, திட்டமிட்டபடி படத்தினை திரைக்குக் கொண்டுவரும் முனைப்போடு படக்குழு பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், ‘லாபம்’ படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி ‘லாபம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நெருக்கடியான நிலையைக் கருத்தில்கொண்டு ‘எம்.ஜி.ஆர் மகன்’ உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரம்ஜான் தினத்தன்று படத்தை வெளியிடுவதில் ‘லாபம்’ படக்குழு உறுதியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறி, படக்குழு நேற்று (22.04.2021) வெளியிட்ட 'யாமிலி யாமில்லியா...' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் கணிசமான கவனத்தைப் பெற்றுவருகிறது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe