"மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம்" - விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய எல். முருகன்

l murugan praises vijay sethpathi movie maamanithan

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேசத்திரைப்பட விழாவில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0c6085fb-b67d-40da-abe2-1a24a758896e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_21.jpg" />

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 'மாமனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்.இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இதுபோன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor vijay sethupathi l murugan maamanithan seenu ramasamy
இதையும் படியுங்கள்
Subscribe