திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டூடியோ ஒன்று இருக்கிறது. இந்த ஸ்டூடியோவில் நேற்று இருந்த ஏ.ஆர்.ரஹ்மானை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்றுள்ளார்.
ஸ்டூடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானும் எல்.முருகனும் சந்தித்து பேசியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது. எதற்காக இந்த சந்திப்பு, சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
சமீபத்தில் மீனா, பா.ஜ.க. தலைவர்களை டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார். அது பேசுபொருளான நிலையில் தற்போது இந்த எல்.முருகன் - ஏ.ஆர். ரஹ்மான் சந்திப்பும் பேசுபொருளாகியுள்ளது.