/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/231_14.jpg)
1993 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ’ஜென்டில்மேன்'. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகத் தயாராகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல்' சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில், நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்க இசையமைப்பாளராக ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையமைக்கிறார். வைரமுத்து பாடலாசிரியராகப் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஆரம்ப விழா மற்றும் கீரவாணிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாகவும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் நடத்தியிருக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கீரவாணியைப் பற்றி பேசிய எல்.முருகன், "இசையமைப்பாளர் கீரவாணி கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஆயிரக்கணக்கான சினிமாக்களில் இசையமைத்துள்ளார். அவருடைய 'அழகன்...' என்ற பாடலை பல முறை நான் விமானத்தில் வரும் போது கேட்டுள்ளேன். அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது, காலதாமதமாக பார்க்கிறேன். அப்போதே அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். உலக அளவில் அவருக்கு கிடைத்தஅங்கீகாரம் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம். அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு வரலாற்று சாதனையை செய்திருக்கிறார்.
தமிழ் சினிமா எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதற்கு பல படங்களை உதாரணத்துக்கு சொல்லலாம். ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் மட்டும் தான் பான் இந்தியா படமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாக்கள் சர்வதேச அளவிற்கு உயர்ந்துள்ளது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)