Advertisment

கே.வி.ஆனந்த் இயக்க திட்டமிட்டிருந்த அடுத்த படம் குறித்து வெளியான புதிய தகவல்!

K. V. Anand

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.வி.ஆனந்த், நேற்று (30.04.2021) அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவமானது நிகழ்ந்துள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் ஏற்படுத்திய ரணம் ஆறுவதற்குள் இயக்குநர் கே.வி.ஆனந்தின் மரணச் செய்தி பேரிடியாக இறங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த துயரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், கே.வி.ஆனந்த் அடுத்தாக இயக்கத் திட்டமிட்டிருந்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்தல் அரசியலின் பின்னணியில் உருவாகும் காதலை மையப்படுத்தி ஒரு கதையை கே.வி.ஆனந்த் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய முந்தைய படங்களான கோ, கவண் போல இந்தப் படத்தையும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான படமாக உருவாக்கத் திட்டமிட்டிருந்தாராம்.

Advertisment

kv anand
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe