/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/81_25.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி குவைத்அரசாங்கம் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்அங்குள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு முன்பு இதே போன்ற காரணத்தை கூறி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'எஃப் ஐ ஆர்' படத்திற்கும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'குரூப்' படத்திற்கும் குவைத் அரசாங்கம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)