Advertisment

முன்னணி நாயகனுடன் படம்...! மீண்டும் இயக்கும் குட்டிப்புலி நடிகர்

சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறிய மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி வரிசையில் இப்போது இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

Advertisment

saravana sakthi alt="sss" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c6b6b4ff-6b09-44f9-8f91-fc29648077db" height="182" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90_16.jpg" width="408" />

Advertisment

தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்த இவர் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெற்று வசூல் செய்தது. இதையடுத்து அவர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் சமீபத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் அஜித் ரசிகரை மையப்படுத்தி உருவான பில்லா பாண்டி படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் இவர் நடிப்பதற்கிடையில் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

saravana sakthi vishal keerthysuresh sandakozhi2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe