ggsag

கரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்காமல் இருந்த சமயத்தில் ஓடிடியில் படங்கள் வெளியாவது வழக்கமாகிப் போனது. இதன் காரணாமாக சில குறும்படங்களின் குவியலாக வரும் ஆந்தாலஜி வகை படங்கள் மிகவும் பிரபலமாகின. இந்நிலையில், தற்போது ஆந்தாலஜி வகை படங்கள் தியேட்டர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இயக்குனர்கள் கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘குட்டி ஸ்டோரி’ படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இதில், நலன் குமாரசாமி படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, ‘அருவி’ பட புகழ் அதிதி பாலன் நடித்துள்ளனர். கெளதம் மேனன் படத்தில், அமலா பால் நடித்துள்ளார். விஜய் படத்தில் வருண், சாக்ஷி அகர்வால் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.