/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/202105141550121781_Tamil_News_Tamil-cinema-kutty-ramesh-passed-away_SECVPF.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் சில மாதங்களாகவே திரைபிரபலங்களான விவேக், கே.வி.ஆனந்த் பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramesh140521_1.jpg)
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். நடிகர் குட்டி ரமேஷின் திடீர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி பிஏ தொடரில் நாயகியின் தந்தையாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)