நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குற்றம் புதிது’. ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கரண் க்ருபா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், “என்னிடம் நான்கு, ஐந்து கதைகள் இருந்தது. ஆனால் நாயகன் தோற்றத்திற்கேற்ப இந்த கதையை படமாக்கியுள்ளேன். நாயகனின் அர்பணிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்தது. ப்ரீ ப்ரொடைக்ஷனிலே போஸ்ட் ப்ரொடைக்ஷன் பணிகளை கருத்தில் கொண்டு எல்லாமே பக்காவாக பிளான் செய்து வைத்திருந்தோம். அதனால் படப்பிடிப்பில் எந்த குழப்பமும் வரவில்லை. சுமுகமாக நடத்தி முடித்தோம். இதற்கு படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர்” என்றார்.