Advertisment

"நோ பேச்சு ஒன்லி பஞ்ச்" - கவனம் ஈர்க்கும் 'குத்துக்கு பத்து' டீசர்

Kuthukku Pathu teaser goes viral

‘டெம்பிள் மங்கீஸ்’ என்ற இணையதள குழுவினர் 'குத்துக்கு பத்து' என்ற வெப் தொடரைஉருவாக்கியுள்ளனர். இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ குழுவினருடன் 'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் தியகராஜ் இயக்கியுள்ள இந்த தொடருக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.இத்தொடரின் அணைத்து பணிகளும் முடிந்து வரும் 13 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. குத்துக்கு பத்து தொடரின்ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்லவரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இத்தொடரின் இயக்குனர்இயக்குநர் பேசுகையில்,'' காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும் போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைத்தளத் தொடர் 'ஆஹா' ஒரிஜினல் படைப்பாக வெளியாவதில் எங்கள் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சி.'' என்றார்.

Advertisment

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe