Advertisment

பா.ரஞ்சித்தின் 'குதிரைவால்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

kuthiraivaal movie release march 24

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, 'ரைட்டர்' போன்ற படங்களை தயாரித்து வெற்றிக்கண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது கலையரசன் மற்றும்அஞ்சலிப்பாட்டில் நடித்துள்ள குதிரைவால் படத்தை யாழிநிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள்மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்.

Advertisment

ஏற்கனவே இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போதுபடத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி,குதிரைவால் திரைப்படம் மார்ச் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Kuthirai vaal pa.ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe