kushi team said Samantha and vijay devarakonda not injured during shooting spot

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். குத்து சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்துவிஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கும் குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்நிலையில் காஷ்மீரில் படத்தின் சண்டை ஒன்றை படமாக்கப்பட்ட போது விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் பயணித்த கார் தவறுதலாக ஆற்றில் விழுந்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனை மறுத்துள்ள படக்குழு தரப்பு இது தவறான செய்தி என்றும், காஷ்மீரில் எந்த ஒரு விபத்தும் ஏற்படாமல் படப்பிடிப்பை முடித்து ஹைதராபாத் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் எனவும்தெரிவித்துள்ளது.இப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.