vbdbdzbz

Advertisment

சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் நடிகை குஷ்பூ சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த அவர், குறிப்பாக ட்விட்டரில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவரது ட்விட்டர் கணக்கை 13 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அவரது கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

Advertisment

ஹேக் செய்யப்பட்ட இவரது ட்விட்டர் பக்கத்தின் பெயர் 'khushsundar' என்பதற்கு பதிலாக 'briann' என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளும் ஹேக்கர்கள் அழித்துவிட்டனர். இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் கணக்கு ஹேக்கர்களிடம் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.