Advertisment

'நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது' - குஷ்பு 

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று ‘நான் சிரித்தால்’ படம் வெளியானது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பூ பேசும்போது...

Advertisment

ff

''இது போன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சிக்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கே.எஸ்.ரவிக்குமாருடன் நீண்ட நாள் நட்பு இருக்கிறது. இப்படத்தின் வெற்றி ஒவ்வொருவரும் அடுத்தவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் காப்பாற்றுகிறார்கள். இன்றைய காலத்தில் நகைச்சுவையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு. ஆனால், நாங்கள் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்டார். எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய வெற்றிக்கு எனது பின்னால் பக்கபலமாக இருக்கும் எனது கணவர் சுந்தர்.சி. தான் காரணம்'' என்றார்.

naan sirithal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe