Advertisment

வைரலான ஆடியோ! மன்னிப்புக் கேட்ட நடிகை குஷ்பு!

kushbu

நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு பத்திரிகையாளர்களைத் தவறாகப் பேசியிருப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது குஷ்பு அதுகுறித்து தனது ட்விட்டர் பதிவுகளின் மூலம் விளக்கமளித்துள்ளார்.

Advertisment

அதில், “நான் பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர் குரூப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி உள்ளவர்கள் இருப்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது. எனது நோக்கம் ஊடகத்தை மரியாதை குறைவாகப் பேசுவது இல்லை. நண்பர்களுடன் பேசும் தொனியில் தான் பேசினேன்.

Advertisment

எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் ஒருமுறை கூட ஊடகத்துறையினர் முன் நான் மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது. அந்த வாய்ஸ் மெசேஜ் பாதியில் இருக்கிறது. ஆனால் அதனால் யாராவது புண்பட்டிருந்தால், எனது மன்னிப்புகள்.

துரதிர்ஷ்டவசமாக நீங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களே தான் உங்களை முதுகில் குத்தத் தயாராக இருக்கிறார்கள். எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்தார் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவரது பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. எனது பொறுமையும் மன்னிப்பும் அவருக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe