kushboo tested positive covid19

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

Advertisment

அந்தவகையில்நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. லேசான சளி இருந்ததைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் நடிகை குஷ்புக்கு கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்குத்தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாகதனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment