kushboo talk about rambambam song

Advertisment

இயக்குநர் சுந்தர் சி, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தைஅக்டோபர்7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி நேற்று வெளியானஇப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் யுவன் இசையில் வெளியான பாடல்கள்அனைத்தும் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் கமல், குஷ்பூ நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காமராஜ்' படத்தில் இடம்பெற்ற 'ரம்பம் ஆரம்பம்...' பாடலைஇயக்குநர்சுந்தர் சி வைத்துள்ளார். அந்த பாடலும்யூடியூப் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இப்பாடல் குறித்து பேசிய குஷ்பூ, "இந்த படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலை பயன்படுத்தியுள்ளார்கள் ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்த பாடலை படமாக்க போகிறோம்னுசுந்தர் சி கூறினார். முதல் நாள் சொன்னால் எப்படி வரமுடியும். நான் நடித்த பாடலில்நான் இல்லாதது வருத்தமாக இருக்கிறது என்றார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து மற்றவர்கள் இதுபற்றி சுந்தர். சியிடம்கேட்டபோது, குஷ்பூஆடி ஏற்கனவே அந்த பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல. வேணுன்னா உங்களுக்கு குஷ்பூவ ரீல்ஸ் எடுத்து போடுறான்என்று ஜாலியாக சமாளித்தார்.