Advertisment

"நீண்ட நாள் ஆசை, வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி" - நடிகை குஷ்பு நெகிழ்ச்சி !

kushboo talk about meera serial

90 களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போதுஅரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜக செய்தி தொடர்பாளராகஇருந்து வரும் குஷ்பு இடையில் சினிமா தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை குஷ்பு 'மீரா' என்ற நெடுந்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீரா தொடரில் நடிப்பது மட்டுமின்றி , இத்தொடருக்கான கதையையும்குஷ்புவே எழுதியுள்ளார். இத்தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான மீரா கதாபாத்திரத்தில் குஷ்புவும், கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் சுரேஷ் சந்திர மேனனும்நடித்துள்ளனர். கடந்த 27 ஆம் தேதியில் இருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரைஜவஹர் இயக்கி வருகிறார்.

Advertisment

இத்தொடர் குறித்துநடிகை குஷ்பு கூறுகையில், "இத்தொடர் மூலம் ஒரு முழு நேர எழுத்தாளராகவும் மற்றும் கருத்துருவாக்கம் செய்வதிலும் நான் பெருமை கொள்கிறேன். எனது கனவு செயல்திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறது. உறுதியான, சுதந்திரமான மற்றும் சுயசார்புள்ள ஒரு பெண்ணைச் சுற்றிய ஒரு கதையை தமிழ் தொலைக்காட்சி தளத்தில் சொல்ல வேண்டுமென்பது, நான் நீண்டகாலமாக விரும்பிய ஒரு விஷயம். மீரா நெடுந்தொடரில் இதை செய்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதாபாத்திரத்தோடு பார்வையாளர்கள் தங்களை தொடர்புபடுத்திப் பார்த்துஉத்வேகம் பெறுவார்கள் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

tamil cinema actress kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe