Advertisment

“அவருக்கு ஒரு நாள்கூட பொண்டாட்டி நினைப்பே வரல” - நடிகை குஷ்பூ

kushboo talk about coffe with kadhal

இயக்குநர் சுந்தர் சி, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தைஅக்டோபர்7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி நேற்று நடைபெற்ற இப்படத்தின் ட்ரைலர்வெளியீட்டு விழாவில்பேசிய குஷ்பூ,“நாங்கள் எங்களது அக்னி சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் நிறைய நல்ல படங்களைதயாரித்துள்ளோம். அதற்கு ஒரே காரணம் இயக்குநர் சுந்தர்.சி சார்தான். அவரைநம்பி நாமஎவ்வளவு காசு வேண்டுமானாலும் படத்தில் போடலாம். நான் சுந்தர்.சி என் கணவர் என்பதால் இதை கூறவில்லை. ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன். அவரைநம்பி காசு போட்டால், திரும்ப வந்துரும் என்று தயாரிப்பாளர் நிம்மதியாக தூங்க போகலாம். அப்படிபட்டநல்ல படங்களைகொடுக்ககூடியஇயக்குநர்தான் சுந்தர் சி.

Advertisment

காஃபி வித் காதல் படத்தில் மூன்று அழகான கதாநாயகிகள், அழகான கதாநாயகர்கள் உள்ளனர். இப்படத்தில் திவ்யதர்ஷினியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. இந்த படத்தோட படப்பிடிப்பு 38 நாள் ஊட்டிலநடந்தது. படப்பிடிப்பில் என் கணவர் சுந்தர்.சி செம ஜாலியாஇருந்திருக்காரு. 38 நாள்ல ஒரு நாள்கூட பொண்டாட்டி நினைப்பேஅவருக்கு இல்லை. அப்போதான் ஒருநாள்எங்களுடையகல்யாண நாள் வந்தது. எப்படியும் அவரு வரமாட்டாருன்னு எனக்கு தெரியும். அதுனாலநானே அவருக்கு போன் பண்ணி நான் மூணு நாள் உங்க கூட இருக்கணும். ஊட்டிக்கு வரேன்னு சொன்னேன். அப்போ கூட அவர்கிட்டருந்துஒரு ரியாக்ஷனும் இல்லை. வரியா..வாஅவ்வளவுதான்ரியாக்ஷ்ன். அவரு படக்குழுவுடன் சந்தோஷமாகஇருந்திருக்காரு" என கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

actress kushboo Coffee With Kaadhal movie sundar c
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe