Advertisment

நடிகர் விவேக்கிற்காக பிரார்த்தனை செய்யும் குஷ்பு!

vivek

Advertisment

தமிழ் சினிமாவின் மூத்த காமெடி நடிகரான விவேக், திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நடிகர் விவேக் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களுள் விவேக்கும் ஒருவர். அவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் நலமடைந்து நம்மோடு இணைவார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக் நேற்று (15.04.2021) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

actor Vivek actress kushboo
இதையும் படியுங்கள்
Subscribe