ரஜினியுடன் ஒரு சந்திப்பு - மகிழ்ச்சியில் குஷ்பு

kushboo meets rajinikanth

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ள குஷ்புவுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் கதாநாயகனாக நடிக்கும் 'ஹரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்.

இந்நிலையில் குஷ்பு ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட குஷ்பு, "சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரணமான சந்திப்பு. அவருடன் தேநீர் அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் குஷ்பு. பின்பு ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை, பாண்டியன்உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய திரைப்பயணத்தின்தொடக்கத்திலிருந்து ரஜினியுடன் நல்லநட்பு புரிந்து வருகிறார் குஷ்பு.

Actor Rajinikanth actress kushboo
இதையும் படியுங்கள்
Subscribe