ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்குள் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

kushboo

விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் தள்ளிப்போனதால் ரஜினியின் படத்தை எடுக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisment

ரஜினியின் 168வது படமாக உருவாக இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனையடுத்து மேலும் ஒரு கதாபாத்திரம் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை மீனா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா, 24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 28 வருடங்கள் கழித்து அண்ணாமலை படத்திற்கு பின்னர் ரஜினி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment